அரசு அலுவலர்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 19-ம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர் வாணையத்தால் அரையாண்டு மற்றும்# மொழித்தேர்வுகள் நடைபெறவுள்ளது. மேற்படி அரையாண்டு தேர்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மொழித்தேர்வுகள் வருகிற மே மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையும், குரல் தேர்வு வருகிற மே மாதம் 8-ம் தேதி என்றும் சென்னையில் மட்டுமே நடைபெறும்.
Revenue Survey and Finance
தேர்வெழுத வரும் தேர்வர்கள் உதவி அல்லது துணை ஆட்சியருக்கான நில அளவை, கருவூல பயிற்சி மேற்கொள்ளும் பயிற்சியாளர் என்பதற்கான சான்றிதழினை தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு மற்றும் குரல் தேர்வு என 2 கட்டங்களாக நடைபெறும்.
இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் www.tnpsc.gov.in /www.tnpscexams.net மூலம் எதிர்வரும் 19-ம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்வு கட்டணமாக பிரதி தேர்வு, மொழிக்கு ரூ. 5 எனவும், தட்டச்சு செய்யப்பட்ட, எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும் என்றும், மேற்படி தேர்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும்.
No comments:
Post a Comment