2 முதல் 9-ம் வகுப்புவரை பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடப்பயிற்சி மே 10-ந் தேதி வரை நடக்கிறது.
பள்ளிகள் மூடல்
2020-21-ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல், கற்பித்தல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2 முதல் 9-ம் வகுப்புவரையுள்ள மாணவர்களுக்கு இணைப்புபயிற்சி கட்டகமும் (Bridge Course Material), 1 முதல் 9-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பயிற்சிபுத்தகமும் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்விதுறை முதன்மைச் செயலாளர் அறிவுரையின்படி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக நேற்று முதல் மே மாதம் 10-ந் தேதி வரை இணைப்பு பாடப்பயிற்சி கட்டக (Bridge Course Material) காணொலிகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.
காணொலியில் ஒளிபரப்பு
ஒரு வகுப்பிற்கு தினசரி 2 காணொலி வீதம் (1 காணொலி 30 நிமிடங்கள்) 2 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மே 10-ந் தேதிவரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் விவரம் வருமாறு:
9-ம் வகுப்பு: காலை 8 மணி- 8.30 மணி. பகல் 12 மணி- 12.30 மணி.
8-ம் வகுப்பு: காலை 8.30 மணி-9 மணி. பகல் 12.30 மணி- 1 மணி.
7-ம் வகுப்பு: காலை 9 மணி-9.30 மணி. பிற்பகல் 1.30 மணி- 2 மணி.
6-ம் வகுப்பு: காலை 9.30 மணி- 10 மணி. பிற்பகல் 2 மணி- 2.30 மணி.
5-ம் வகுப்பு: காலை 10 மணி- 10.30 மணி. பிற்பகல் 2.30 மணி- 3 மணி.
4-ம் வகுப்பு: காலை 10.30 மணி- 11 மணி. மாலை 3 மணி- 3.30 மணி.
3-ம் வகுப்பு: காலை 11 மணி- 11.30 மணி. மாலை 3.30 மணி- 4 மணி.
2-ம் வகுப்பு: முற்பகல் 11.30 மணி- பகல் 12 மணி. மாலை 4 மணி- 4.30 மணி.
பயிற்சி புத்தக காணொலி
இணைப்புப்பாட பயிற்சிகட்ட காணொலி ஒளிபரப்பு மே 10-ந் தேதியன்று முடிவடைந்த உடன், தொடர்ந்து பயிற்சி புத்தகத்திற்கான காணொலிகளும் ஒளிபரப்பு செய்யப்படும்.
எனவே, முதற்கட்டமாக வழங்கப்படும் இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் காணொலி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என் திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment