வளிமண்டல சுழற்சியால் 28 வரை கோடை மழை - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, April 26, 2021

வளிமண்டல சுழற்சியால் 28 வரை கோடை மழை

தென்மாவட்டங்களை ஒட்டிய வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், நாளை மறுதினம் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு:



தமிழக தென்மாவட்ட கடலோர பகுதி வரை நீடித்துள்ள வளிமண்டல சுழற்சியால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. 


 மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடலோர மாவட்டங்களில் காற்றின் இயல்பான வெப்பநிலை, 5 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பொள்ளாச்சி, சிவலோகம் - 4; ஏலகிரி, ஓசூர், பெரியாறு, ஆழியாறு - 3 செ.மீ., மழை பெய்துள்ளது.பொன்னை அணை, குந்தா பாலம், ஒகேனக்கல், 2; செங்கோட்டை, சங்கரிதுர்க்கம், மன்னார்குடி, மணமேல்குடி, திருச்செங்கோடு, உடுமலை பேட்டை, எட்டயபுரம், சேலம், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment