சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, April 2, 2021

சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மிகவும் அவசரம் - 
சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 




ந.க.எண். 0018/ஆ1/2020 நாள்.01.04.2021 

பொருள்... 

2021 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல்-சேலம் மாவட்டம் வாக்குச் சாவடி பணியாளர்கள் நியமனம்-பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் - தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறை அளித்தல் - சார்பு. 

பார்வை... 

1. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கடிதம் ந.க.எண்..அ1/26776/2020. நாள்..07.12.2020, 16.12.2020 மற்றும் 23.12.2020 
2. பொது (பல்வகை) துறை, அரசாணை எண்.160, நாள்.16.03.2021 
3. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை, நாள்.01.04.2021 2021 

ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் சார்பாக சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் சார்ந்த பணிகள் 03.04.2021 மற்றும் 05.04.2021 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளன. எனவே, தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் மற்றும் தேர்தல் சார்ந்த பணிகள் நடைபெறும் நாட்களான 03.04.2021 மற்றும் 05.04.2021 ஆகிய நாட்களுக்கு மட்டும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மேலும் பார்வை-2இல் காணும் அரசாணையின்படி, தேர்தல் நடைபெறும் நாளான 06.04.2021 செவ்வாய்கிழமை அன்று சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. - 

ஓம்/-து.கணேஷ்மூர்த்தி, 
முதன்மைக் கல்வி அலுவலர், 
சேலம். 

பெறுநர். - 

அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்கள், 
சேலம்மாவட்டம், அனைத்துவட்டாரக் கல்வி அலுவலர்கள், 
சேலம் மாவட்டம். 
அனைத்துவகை அரசுமற்றும் அரசுஉதவிபெறும்பள்ளித்தலைமையாசிரியர்கள், சேலம் மாவட்டம். 

நகல்... * 

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்குபணிவுடன் அனுப்பலாகிறது.
DOWNLOAD COPY

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment