ஆன்லைன் தேர்வுகள் வீடியோ பதிவு! வேளாண் பல்கலையில் விரைவில் புதிய சாப்ட்வேர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 17, 2021

ஆன்லைன் தேர்வுகள் வீடியோ பதிவு! வேளாண் பல்கலையில் விரைவில் புதிய சாப்ட்வேர்

ஆன்லைன் தேர்வை முழுவதும் வீடியோ பதிவு செய்யும் புதிய சாப்ட்வேர், வேளாண் பல்கலையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, துணைவேந்தர் குமார் தெரிவித்தார். 

கொரோனா காரணமாக பள்ளி, கல்லுாரிகள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இடையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள், தேர்வு முறையை மேற்கொள்ள, மத்திய உயர்கல்வி அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்கலை, கல்லுாரிகளுக்கு ஆன்லைன் தேர்வுகள் மற்றும் பாடங்களை நடத்த உரிய அறிவுறுத்தல்கள் மாநில உயர்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளன. 
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேர்வு முறைகளை எவ்வித இடையூறுமின்றி நடத்த தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெறப்பட்டது. தேர்வை மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே எவ்வித சிக்கலும் இன்றி எதிர்கொள்ள முடியும். அதில், கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் என, காகிதங்களின் பயன்பாடின்றி ஆன்லைனில் நேரடியாக பதில் வழங்குதல், தேர்வுகளை முழுமையாக வீடியோ பதிவு செய்து தேவையான நேரங்களில் மீண்டும் பார்த்தல் போன்ற நவீன வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது தவிர்க்கும் வகையில் கண்காணிப்புகள், புதிய தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது. 


துணைவேந்தர் குமாரிடம் கேட்டபோது, ''ஆன்லைன் தேர்வில், புதிய சாப்ட்வேர் பயன்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் தனியார் நிறுவனங்களிடம் பெறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை இருப்பதால், அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment