‘புரொபைல் பிக்சர்’ தேர்வில் தடுமாறுகிறீர்களா..? - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 24, 2021

‘புரொபைல் பிக்சர்’ தேர்வில் தடுமாறுகிறீர்களா..?

ஸ்மார்ட்போன் முழுக்க நம்முடைய செல்பிக்கள்தான். இருந்தும் எதை புரொபைல் படமாக வைப்பது என்பதை நம்மால் முடிவு செய்யவே முடியாது. உதாரணமாக, இரண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 


அவற்றில் முதலில் எடுத்த புகைப் படமே உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது, இரண்டாவது புகைப்படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் நண்பர்கள் இருவரோ, இரண்டாவது புகைப்படத்தில் தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். இப்போது இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதில் உங் களுக்குக் குழப்பம் வருமில்லையா? இனிமேல் குழப்பமே வேண்டாம். உங்கள் நண்பர்கள் சொன்ன இரண்டாவது புகைப்படத்தையே தேர்வு செய்யச் சொல்கிறது சமீபத்திய உளவியல் ஆய்வு ஒன்று. நம்முடைய சிறந்த புகைப்படத் தினைத் தேர்வு செய்வதில் நாம் பெரும்பாலும் சொதப்பவே செய்வோம் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 102 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொரு வரின் பேஸ்புக் கணக்கில் இருந்தும் ஒரு டஜன் புகைப்படங்களைப் பெற்றனர். பின்பு அவற்றை, கவர்ச்சி, நம்பகத்தன்மை, ஆளுமைத்திறன் போன்ற பல்வேறு வகைகளின் கீழ் அவர்களைக்கொண்டே, மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். அதைத்தொடர்ந்து, 160 அந்நியர் களைக் கொண்டு மேற்சொன்ன அதே மதிப்பீடுகளின் கீழ் மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். இறுதியில், பெறப்பட்ட அந்த இரண்டு முடிவுகளுமே ஒன்றுடன் ஒன்று பொருந்தாத வகையில் காணப்பட்டது. 

இதில் சுவாரசியம் என்ன வெனில், மாணவர்களைப் பொறுத்தவரையில் தங்களின் சிறந்த புகைப்படம் என்று கருதிய படங்களுக்கு, மற்றவர் களிடமிருந்து மிகக்குறைவான மதிப்பெண்களும், அவர்கள் பெரிதும் விரும்பாத புகைப்படங்களுக்கு அதிக மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இம்முடிவுகள் சுய விளக்கக் கோட்பாட்டிற்கு முரணாக இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர். இதற்குக் காரணம், நாம் ஒவ்வொருவரும் நம்மை, ‘சராசரியினை விட உயர்ந்தவர்கள்’ என்று நினைப்பதன் விளைவாக இருக்கலாம் அல்லது பெரும்பாலும் நம்முடைய நேர்மறையான குணாதிசயங்களை வைத்தே நம்மை மதிப்பிடுவதன் விளைவாகவும் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

புகைப்படத்தினைப் பார்ப்பதற்கு முன்பாகவே நம்மைப் பற்றிய சில அபிப்ராயங்களை வகுத்துக்கொண்டு அந்தத் தரத்திலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நம் மனம் விரும்பாததால், நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களுமே, சிறப்பானதாக தோன்றுகிறதாம். ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை என்பதே நிதர்சனம். நம்மைப் பொறுத்தவரையில் மட்டும் தான், அது ஒரே நபரின் 12 வெவ்வேறு புகைப்படங்கள். ஆனால் பிறருக்கோ அந்த 12 புகைப்படங்களும் 12 வெவ்வேறு கதைகளைச் சொல்லும். 

No comments:

Post a Comment