இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்: உயர் நீதிமன்றம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, April 21, 2021

இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்: உயர் நீதிமன்றம்

இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம்: உயர் நீதிமன்றம் 

இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிவேகமாகச் செல்வதே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 


வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பள்ளிப் பாடத் திட்டங்களில் சாலைப் போக்குவரத்து விதிகளை கற்பிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளைப் பொருத்த வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். 


எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற உத்தரவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாகச் செல்வதே உயிரிழப்புகளுக்குக் காரணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment