ஷாப்பிங் செயலிகளுக்கு ஜூன் முதல் தடை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 13, 2021

ஷாப்பிங் செயலிகளுக்கு ஜூன் முதல் தடை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

ஷாப்பிங் செயலிகளுக்கு ஜூன் முதல் தடை: கூகுள் நிறுவனம் அறிவிப்பு 


இணைய வழியில் பொருள்களை வாங்கும் செயலிகளுக்கு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு இயங்குதளங்களிலும் ஷாப்பிங் செயலிகளை ஜூன் மாதம் முதல் நீக்குவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

ஏராளமான ஷாப்பிங் செயலிகள் தங்களது இணையதள விற்பனையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கூகுள் உதவியுள்ளது. இந்நிலையில், செயலிகளுக்கு பதிலாக தங்களது இணையத்திலேயே தேவையான பொருள்களை வாங்கும் வகையில் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, அடுத்த சில வாரங்களில் இணையதள செயலிகளை ஆதரிக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக கூடுதலாக ஷாப்பிங் டேப் என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதில் செயலியில் பொருள்களை வாங்குவதைப் போன்றே தங்களது மின்னஞ்சலை பயன்படுத்தி பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். 

ஷாப்பிங் டேப் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படும். தங்களது கூகுள் கணக்கைப் பயன்படுத்தி இணையதள விற்பனை மையங்களில் தேவையான பொருள்களை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment