மென்பொருளில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எந்தத் தகவல் திருட்டுக்கும் வாய்ப்பு இல்லை' என, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளமான, வாட்ஸ் ஆப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.இந்நிலையில், வாட்ஸ் ஆப் செயலியின் சில மென்பொருள் வாயிலாக, பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக, 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான, 'செர்ட்இன்' எனப்படும், இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளதாவது:
பயன்பாட்டில் இல்லாத மென்பொருளில் சில பிரச்னைகள் இருந்தன. அவை சரி செய்யப்பட்டுள்ளன. அதனால், பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.எங்கள் மென்பொருள்களை, நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பு அம்சங்களையும் தொடர்ந்து சேர்த்து வருகிறோம். பயனாளிகளின் தகவல்கள் எந்த வகையிலும் திருடப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த செயலி முழு பாதுகாப்பானது.இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment