கோடைக் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க... - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 13, 2021

கோடைக் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க...



கோடைக் காலத்தில் பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத் தேவையான நீர் கிடைக்காதபோது சருமம் வறண்டு காணப்படும். 
மேலும் வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள் ஏற்படும். இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள் இருப்பினும் தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும். 
இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும். கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் வந்தாலும் இந்த கலவையைத் தடவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம். வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment