ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 15, 2021

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு

ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு ஆயத்த பணிகள் தொடங்க உத்தரவு

தமிழ கத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிக ரித்து வருவதால் பிளஸ்2 தவிர்த்து இதர வகுப் புகளுக்கு வீட்டு பள்ளி திட்டத்தின் கீழ் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங் கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடிவடை கிறது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக் கான (2021-22) மாணவர் சேர்க்கைபணிகளில் தனி யார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள் ளிகளில் சேர்க்கை பணி கள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், தற் போது அரசு பள்ளிகளும்  மாணவர் சேர்க்கைக் கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இது குறித்து பள் ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதா வது:

கொரோனா பரவ லால் பள்ளிகளை முழு மையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனினும், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்வி சார் வேலைகளை மேற் கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர் கள் பள்ளிக்கு வந்தால், அவர்களை முறையாக வரவேற்று, உரிய முன் விவரங்களை வைத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். 


அதே போல, அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும், சுற்றியுள்ள பகு திகளிலும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாண வர் சேர்க்கை பணிகளை எமிஸ் இணையதளம் வழி யாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள லாம். இந்த பணிகளின் போது கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப் பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங் கப்பட்டுள்ளன. வாறு அவர்கள் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment