ஆனர்ஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை. அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, April 13, 2021

ஆனர்ஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை. அறிவிப்பு

இளங்கலை, முதுநிலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு ஏப்.30-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் திருச்சியில் இயங்கிவருகிறது. இங்கு பிஏ.எல்எல்பி(ஆனர்ஸ்), பிகாம்.எல்எல்பி (ஆனர்ஸ்), எல்எல்எம் (பெருநிறுவன சட்டம், அறிவுசார் சொத்துரிமை, இயற்கை வள சட்டம்) படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை பெங்களூரு தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். 

 அதன்படி, வரும் கல்வி ஆண்டு(2021-2022) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஏப்.30-ம்தேதிக்குள் ஆன்லைனில் (www.consortiumofnlus.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். முதல்தலைமுறை பட்டதாரி உதவித்தொகை, ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகளின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnnlu.ac.in) அறிந்துகொள்ளலாம் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment