அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 29, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு 

இந்தச் செய்தியினையும் படிக்கவும்



சென்னை 

ஐகோர்ட்டில், பாலமுரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி, தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் விளக்கவில்லை. அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. 


தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். இந்த நிலையில், ஓய்வு வயதை அதிகரித்துள்ளதால், 2020-21-ம் ஆண்டுகளில் 45 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறவில்லை. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment