கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டு இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா பரவல்
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் பல்கலைக்கழகம் மூலம் திட்டமிடப்பட்டு இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் வாயிலாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தியது. அதில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரி மாணவர்களில் சிலர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக எழுத முடியவில்லை. அவர்களுக்கும், அதேபோல், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி.
அதன்படி, வருகிற 3-ந் தேதி அவர்களுக்கான தேர்வு நடத்தப்பட இருந்தது. கொரோனா காரணமாக அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், மறுதேர்வு குறித்த புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அதுபோல, சென்னை ஐ.ஐ.டி. இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கான தேர்வு ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு மூலம் வருகிற 10-ந் தேதி முதல் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. அந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு, தேர்வு குறித்து பின்னர் இறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment