கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, 18 - 44 வயதுக்குட்பட்டோர் முன்பதிவு செய்வது கட்டாயம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது வழங்கப்படுகிறது. 'வரும், 1ம் தேதி முதல், 18 - 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது.
இது குறித்து, மத்திய சுகாதார துறை உயரதிகாரிகள் கூறியதாவது: தடுப்பூசியை பெறுவதற்கு, 18 - 44 வயதுக்குட்பட்டோர், 'கோவின்' இணைய தளத்தில் அல்லது 'ஆரோக்கிய சேது' செயலி வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும்.
MUST READ வளிமண்டல சுழற்சியால் 28 வரை கோடை மழை
வரும், 28ம் தேதி முதல், முன்பதிவு செய்யலாம்.
அதே நேரத்தில், 45 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே அரசு அறிவித்தபடி, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.
தனியார் மையங்களில், திருத்தப்பட்ட கட்டணத்தின்படி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்.
அரசிடம் இருந்து பெற்று, 250 ரூபாய் கட்டணத்தில் தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்துவது, மே, 1 முதல் நிறுத்தப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில், 18 - 44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான நடைமுறை குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* 'தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, 150 ரூபாய்க்கு தடுப்பூசியை மத்திய அரசு வாங்குகிறது. அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment