உலகம் முழுவதும் உள்ள 200 கோடி பயன்பாட்டாளர்களுக்காக வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை அறிவித்து வருகிறது.
மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்ப இந்த சேவைகள் பயனாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக உள்ளன.
அவற்றில் சில தேவையற்றவையாகவும் உள்ளன.
தொழில்போட்டியின் காரணமாகவும், தகவல் பாதுகாப்புக்காகவும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படியுங்கள்
தற்போது வாட்ஸ்அப் சாட்டில் பின்புறத்தில் இருக்கும் திரையின் வண்ணத்தை மாற்றவும், இருண்ட திரையாகப் பயன்படுத்தவும் உதவும் புதிய சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
தற்போது வாட்ஸ்அப் சாட்டில் உள்ள எழுத்துகளைத் தனித்தனி வண்ணங்களில் காணும் வகையில் புதிய சேவை பரிசோதனையில் உள்ளது.
இதையும் படியுங்கள்
இதன் மூலம் குழு சாட்டில் உள்ளவர்களின் உரையாடல்களைத் தனித்தனி வண்ணமிட்டு எளிதல் தேடி கண்டுபிடிக்கலாம்.
இதேபோல், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஆடியோ பதிவுகளை வேகப்படுத்தி கேட்கும் வசதியும் புதிதாக இணைக்கப்பட உள்ளது.
சாட்களில் உள்ள தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் கடவுச்சொல் வசதியையும் வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.
மேலும், வாட்ஸ்அப்பில் சேமிக்கப்படும் சாட்டுகளை ஐபோன்களில் இருந்து ஆன்ட்ராய்டு போன்களுக்கும், ஆன்ட்ராய்டு போன்களில் இருந்து ஐபோன்களுக்கும் எளிதாக மாற்றும் வகையில் புதிய சேவையையும் வாட்ஸ்அப் சோதித்து வருகிறது.
No comments:
Post a Comment