10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்: இணைய வழியில் பயிற்சி வழங்க உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, May 19, 2021

10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்: இணைய வழியில் பயிற்சி வழங்க உத்தரவு

ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையி லான அரசுப் பள்ளி மாணவர் களில் 10 பேருக்கு ஒரு ஆசிரி யரைப் பொறுப்பாளராக நிய மித்து இணையவழி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா இரண் டாம் அலை தீவிரமாக உள்ள தால் தற்போது முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. பள் ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

கரோனா தீவி ரம் குறைந்த பின்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்ட மாண வர்களுக்கு ஆசிரியர்கள் தின மும் கற்றல் பயிற்சி வழங்க வேண் டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறி வுறுத்தி உள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையி லான, அரசுப் பள்ளி மாணவர் களில் 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என, பொறுப்பாளராக நியமித்து இணையவழியில் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என உத்தரவி டப்பட்டுள்ளது. 

அதன்படி, தின சரிபாடப் பயிற்சிகள், செய்முறை கள் போன்றவற்றை வழங்கி, அவ- ற்றை மதிப்பிட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment