தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள்
1 ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும்
தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி WhatsApp Group உருவாக்கப்படுதல் வேண்டும்.
2 மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி WhatApp
Group உருவாக்கப்படுதல் வேண்டும்.
3 தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை
ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு WhatsApp மூலம் அனுப்புதல் வேண்டும்.
4 மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து
தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும்.
5 விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர், பதிவு எண்(அரசுத்தேர்வுத் துறையால்
வழங்கப்பட்ட எண்), பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க
வேண்டும்.
6 அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும்
பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும்.
7 எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து, Pdf கோப்பாக WhatsApp மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும். மாணவர்கள் விடைத்தாட்களை
image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
8 எழுதப்பட்ட விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க
வேண்டும்.
9 பாட ஆசிரியர் Whats app மூலம் பெறப்பட்ட விடைத்தாட்களை Whats app-யிலேயே
திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை What app-பிலேயே Type செய்தல் வேண்டும்.
10 WhatsApp - ல் திருத்தப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whats app மூலம்
அனுப்புதல் வேண்டும்.
11 பயன்படுத்தப்படும் இந்த Whats app Group -ல் வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள்
மட்டுமே இருத்தல் வேண்டும்.
12 பயன்படுத்தப்படும் இந்த WhatsApp Group -ல் பள்ளியின் படம், ஆசிரியர் படம்,
தலைமையாசிரியரின் படம், மாணவர் படம், பெற்றோர் படம் போன்ற எந்த ஒரு படங்களும்
கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது. மேலும், வேறு செய்திகள், வீடியோக்கள் போன்ற
பதிவுகள் கண்டிப்பாக இடம் பெறுதல் கூடாது. இதனை தலைமையாசிரியர் கண்காணித்தல்
வேண்டும்.
13 ஒவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு
விடைத்தாள்/நோட்டில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து, Pdf (Adobe Scan App
மூலம்) ஆக மாற்றம் செய்து WhatsApp மூலம் அனுப்பப்பட வேண்டும்.
14 மாணவர்கள் தேர்வுகளை நோட்டிலோ மற்றும் தாளிலோ எழுதி அதனை பாட வாரியாக
அடுக்கி மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு அறிவிக்கும் நாளில்
இந்நோட்டினை/விடைத்தாளினை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment