14 போட்டித் தேர்வு முடிவுகள்:
ஜூன் 8-இல் வெளியீடு
அரசுத் துறைகளுக்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் 14
தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்று
அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கி
ழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் துறைகளுக்கான தேர்வுகளில் 129 தேர்வுகளுக்கான முடிவு
கள் கடந்த 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அவற்றில் 14 தேர்வுகளுக்
கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தன. இந்த முடிவுகள் ஜூன்
8-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும்,
தேர்வுகளை எழுதவிரும்பும் தேர்
வர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு துறைத் தேர்வுகளுக்கு விண்
ணப்பிக்க கடைசிதேதி ஜூன் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment