தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - முதலமைச்சரின் விரிவான மருவத்துவ காப்பீட்டுத் திட்டம் -
திட்டப் பயனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை
மையங்களில் கோவிட்-19 பரிசோதனை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்து
ஆணை வெளியிடப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்(அஉதி|-1) துறை
அரசாணை (நிலை) எண்: 247
நாள்: 19.05.2021
திருவள்ளுவர் ஆண்டு: 2052
பிலவ, வைகாசி - 05
படிக்கப்பட்டவை:
1) அரசாணை (நிலை) எண் 240, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி1) துறை,
நாள் 05.06.2020.
2) அரசாணை (நிலை) எண் 290, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி1-1) துறை,
நாள் 03.08.2020.
3) அரசாணை (நிலை) எண் 433, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி1-1) துறை,
நாள் 28.10.2020.
4) அரசாணை (நிலை) எண் 578, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி1-1) துறை,
நாள் 29.12.2020.
5) அரசாணை (நிலை) எண் 231, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (அஉதி1-1) துறை,
நாள் 07.05.2021.
மேலும் படிக்கப்பட்டது:
6) திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், கடித எண் 1887/தநாகதி/காப்பீடு-1/2020,
நாள் 17.05.2021.
ஆணை:
தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன்,
ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவச
மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
2. உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கோவிட் தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும், இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும்இந்த கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கோவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்குடன் பெருவாரியாக பரவும் தொற்றுச் சட்டம்-1897-ன்படி வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படியும், கோவிட்-19 தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிகாட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
3. மேலே 6-ல் படிக்கப்பட்ட கடிதத்தில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் அவர்கள், கோவிட்-19 தொற்று சிகிச்சை கட்டணம் குறித்து உயர் மட்ட சிறப்பு குழு கூட்டம் 14.05.2021அன்று நடைபெற்றது குறிப்பிட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், கோவிட்-19 RT-PCR பரிசோதனைக்கான
கட்டணத்தைக் குறைக்க கருத்துருவினை அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.
4. மேற்காணும் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநரின் கருத்துருவினை நன்கு
பரிசீலினை செய்து மேலே நான்கில் படிக்கப்பட்ட அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட கோவிட்-19
தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR கட்டணத்தை கீழ்கண்டவாறு குறைத்து நிர்ணயம் செய்து
அரசு ஆணை வெளியிடுகிறது.
அ) கோவிட் தொற்று உறுதிப்படுத்தும் RT-PCR பரிசோதனை அரசு மற்றும் அரசால்
பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதலமைச்சரின்
விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம்
ரூ.800/- லிருந்து ரூ.550/-ஆகவும், குழு மாதிரிகளுக்கு (Pooled Samples)
ரூ.600/- லிருந்து ரூ.400/- ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆ) முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாதவர்கள்,
தனியார் ஆய்வுக் கூடங்களில் RT-PCR பரிசோதனை செய்வதற்கு கட்டணம்
ரூ.1,200/- லிருந்து ரூ.900/- ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் வீட்டிற்கு சென்று
பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூ.300/-ம் கட்டணம் (மாற்றமின்றி) நிர்ணயம்
செய்யப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத
தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட RT-PCR பரிசோதனைகளுக்கான
தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் (UIIC) மறுபரிசீலனை செய்த
பிறகு மீள வழங்கப்படும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ஜெ.ராதாகிருஷ்ணன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
No comments:
Post a Comment