2021-22-ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப படிப்புகளுக்கு கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது? அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அட்டவணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 7, 2021

2021-22-ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப படிப்புகளுக்கு கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது? அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அட்டவணை வெளியீடு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு முதல் ஒரு கை பார்த்து வருகிறது. அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை என்பது தாமதமாகவே நடந்தது. அதேபோல், மாணவர்களுக்கான படிப்புகளும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப படிப்புகளுக்கு (முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் தவிர) கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது? என்பது குறித்து "அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்" அட்டவணையாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த அட்டவணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டு மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். 


தொழில்நுட்ப படிப்புகளில் படிக்கும் தற்போதைய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். 

அதேபோல், தொழில்நுட்ப படிப்புகளில் சேர 2-ம் கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 9-ந்தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். 


தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் தேர்வான மாணவர்கள் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் சேர வேண்டும். 

அவர்களுக்கான வகுப்புகளும் அதே தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். 

மேலும் 2-ம் ஆண்டில் நேரடியாக சேரும் மாணவர்களை செப்டம்பர் 20-ந்தேதிக்குள் சேர்க்கப்பட வேண்டும். 

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment