வெலிங்டன் கல்லூரியில் வேலை
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இயங்கும் மத்திய அரசின் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் ஸ்டெனோகிராபர் கிரேடு 2, லோயர் டிவிஷன் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்பட83 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MUST READ உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க 5 வழிகள்
22-5-2021 அன்றைய தேதிப்படி வயது வரம்பு 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விரிவான விவரங்களை http://www.dssc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையான விவரங்களை பூர்த்தி செய்து நகல் ஆவணங்களையும் இணைத்து வருகிற 22-ந்தேதிக்குள் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-5-2021.
No comments:
Post a Comment