தமிழக அரசு செய்தி வெளியீடு எண்: 149 நாள்: 24.05.2021 செய்தி வெளியீடு
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்தி வெளியீடு
1. கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு எவ்விதமான தளர்வுகள் இல்லாத முழு தரடங்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
MUST READ நாளை சந்திர கிரகணம் இந்தியாவில் சில பகுதிகளில் காணலாம்
2. இச்சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் இன்றியமையாப் பண்டங்களாகிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத்திட்ட பண்டங்களை தொடர்ந்து பெறும் பொருட்டு கோவிட்-19 பெருந்தொற்கு நிவாரணத் தொகை ரூ.2000/-த்தை, இதுவரை பெறாதவர்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து பெறும் வண்ணம் 25.05.2021 முதல் தளர்வுகள் ஏதுமற்ற முழு ஊரடங்கு சூழ்நிலையிலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தொடர்ந்து காலை 08.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை விநியோகம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
3. அவ்வகையில், உணவுத்துறைப் பணிகளில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளுக்காக பயணிக்க நேரும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்.
4. குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் நிவாரணத் தொகை தடையின்றி வழங்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ள இவ்வுத்தரவினை சீரிய முறையில் எவ்வித தொற்று பாதிப்புமின்றி செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
5. பொது மக்களும் இத்திட்டத்தினை உரிய பாதுகாப்பு முறையில் பயன்படுத்தி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நிலையான வழிகாட்டி நடைமுறையினை பின்பற்றி அவர்களுக்கு உரிய இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
6. பொது மக்களின் நலன் கருதி இத்தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், நியாய விலைக் கடைக்கு செல்லும் போது அதற்குரிய ஆதாரமாக குடும்ப அட்டையுடன் தவறாது செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆணையாளர் வெளியீடு:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
No comments:
Post a Comment