:அமெரிக்காவில் படித்த, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் தீப்தி நர்குதிக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
MUST READ
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த கம்ப்யூட்டர் மென்பொருள் இன்ஜினியரான தீப்தி நர்குதிக்கு, புகழ்பெற்ற 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தில் ௨ கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில், மென்பொருள் மேம்பாட்டு இன்ஜினியராக வேலை கிடைத்துள்ளது.
இவருடைய தந்தை, ஐதராபாத் போலீசில் தடயவியல் நிபுணராக உள்ளார்.
MUST READ
ஓஸ்மானியா பல்கலையில் இளநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடிந்த தீப்தி, அமெரிக்காவில் எம்.டெக்., படித்தார். பின், எம்.எஸ்., முடித்துள்ளார்.மைக்ரோசாப்ட் நிறுவனம், சமீபத்தில் 300 பேரை, மென்பொருள் இன்ஜினியர்களாக தேர்வு செய்தது. அதில், அதிக சம்பளம் தீப்திக்கு கிடைத்துள்ளது.பல்வேறு பிரபல நிறுவனங்களில் இருந்து வாய்ப்பு வந்தபோதும், இந்த வேலையை தீப்தி தேர்வு செய்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் அவர் பணியாற்ற உள்ளார்.
No comments:
Post a Comment