பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 24, 2021

பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு



பிளஸ்-2 தேர்வு குறித்து விரைவில் முடிவு மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு புதுடெல்லி, மே.24- பிளஸ்-2 தேர்வுகள் குறித்தும், அதைத் தொடர்ந்து நடத்த வேண்டிய உயர்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் மாநிலங்களுடன் மத்திய அரசு நேற்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தியது. 

MUST READ 

 ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால், மூத்த மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி, சஞ்சய் தோத்ரே, மாநில கல்வி மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:- நாங்கள் நடத்திய கூட்டம் நன்கு பலன் அளித்தது. 

மதிப்புமிக்க யோசனைகள் பெறப்பட்டன.பிளஸ்-2 தேர்வுகள் தொடர்பாக மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் விரிவான ஆலோசனைகளை 25-ந் தேதிக்குள் (நாளைக்குள்) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.தேர்வுகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து ஜூன் 1-ந் தேதியோ, அதற்கு பின்னரோ முடிவு எடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment