3 விதமாக மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 25, 2021

3 விதமாக மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சி.பி.எஸ்.இ.-ல் 2 கட்டமாக தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாக கூறியுள்ளனர். அதுபற்றி முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை ரீதியாகவும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தின் வரைவு கடிதத்தை தயார் செய்துள்ளோம். 


அதை இறுதி செய்த பிறகு முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வோம். மாநில கல்வித் தேர்வு பற்றியும், சி.பி.எஸ்.இ. தேர்வு பற்றியும் அதில் கருத்து தெரிவித்துள்ளோம். தொற்றின் நிலை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறாக உள்ளது. அதன் அடிப்படையில் நமது மாநிலத்தின் கருத்தை தெரிவிக்க உள்ளோம். ஆசிரியர் மீது புகார் கே.கே.நகரில் ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மீதான புகார் பற்றிய தகவல்கள் என்னிடம் 23-ந் தேதி இரவு தரப்பட்டுள்ளன. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடன் நான் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். 

 அந்த பகுதிக்கான சி.இ.ஓ. அந்த பள்ளிக்கு சென்று அங்கு நடந்த சம்பவம் குறித்த விளக்கங்களை கேட்டுள்ளார். அந்த பள்ளி நிர்வாகம் சார்பில் அது சம்பந்தமாக குழு அமைத்து விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளனர். அந்த பள்ளியின் தாளாளருக்கும் 23-ந் தேதி புகார் வந்ததாக கூறியுள்ளனர். அந்த பள்ளியின் விளக்கத்தை சி.இ.ஓ. மூலம் கேட்டிருக்கிறோம். உண்மை தெரிய வந்ததும் அவர் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மூலமாக அதை நடத்துகின்றனர். அதுபற்றியும் துறை ரீதியாக விவாதித்துள்ளோம். கொரோனா பரவல் கட்டுப்பாடுதான். தளர்வுகள் அறிவிக்கப்படும்போது அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். தஞ்சாவூர் உள்ளிட்ட சில இடங்களில் ஆசிரியர்கள் தானாக முன்வந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
10-ம் வகுப்பு மதிப்பெண்
தமிழகத்தில் பொதுவாக ஆசிரியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சிலர் இறந்து போய்விட்டார்கள். இதுபற்றியும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி ஆலோசித்துள்ளோம். 3 விதமான மதிப்பீட்டு முறைகளுடன் பட்டியல் தயாரித்துள்ளோம். அதில் சரியான முறையை முடிவு செய்து முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி கற்க வசதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment