தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
இதேபோன்று நாளை (மே 13) நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மே 14-ம் தேதி நீலகிரி, கோவை, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
வரும் 15-ம் தேதி மேற்கு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment