தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதிய கலெக்டர்கள்
மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனர் எஸ்.அனிஷ் சேகர், மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை இணை செயலாளர் எஸ்.கார்மேகம், சேலம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
திருச்சி
தமிழ்நாடு மாநில ஆணையத்தின் செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், கடலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு உள்ளார். தொழில் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையர் எஸ்.சிவராசு, திருச்சி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.
தர்மபுரி
திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷிணி, தர்மபுரி மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (தெற்கு) அல்பி ஜான் வர்கீஸ், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.
இடமாற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதி துணை ஆணையர் ஜெ.மேகநாத ரெட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (பணிகள்) மாற்றப்பட்டார்.
தொழில்துறை துணை செயலாளர் ராஜகோபால் சுங்கரா, பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக (தெற்கு) இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் விசு மகாஜன், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment