7 அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’கள் இடமாற்றம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 18, 2021

7 அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’கள் இடமாற்றம்

தமிழகத்தில் 7 அரசு மருத்துவக் கல்லூரி ‘டீன்’கள் இடமாற்றம் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு 
தமிழகத்தில் 7 அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அதன்விவரம் வருமாறு:- 

மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளராக பதவி வகித்து வந்த டாக்டர் ஆர்.சாந்தி மலர், இடமாற்றம் செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் பி.வசந்தாமணி, மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். 

MUST READ 

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஜெ.சங்குமணி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஏ.ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியமர்த்தப்பட்டுள்ளார். 

MUST READ 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஆர்.முருகேசன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி டீனாக செல்கிறார். 

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஆர்.சுகந்தி ராஜகுமாரி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் பி.திருவாசகமணி, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பொறுப்பேற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment