மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு, விழுப்புரம் தொகுதி வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
MUST READ
இதுவரை எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கல்வி உதவித் தொகை திட்டம் 9-ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கானது. அவர்கள் பெயரில் ரூ.3 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.
MUST READ
அது அவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கு கிடைக்கும்.
எஸ்.சி., எஸ்.டி. மாணவிகள் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்யக்கூடாது என்பதற்காகவும் இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 'இன்ஸ்டியூட் ஆப் எகனாமிக் குரோத்' என்ற நிறுவனம் 7 மாநிலங்களில் ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறுத்திவிடலாம் என்று பரிந்துரைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
MUST READ
இது எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
படிப்பைப் பாதியிலேயே இடைநிறுத்தம் செய்வது, சிறுவயதிலேயே திருமணம் செய்து கொள்வது இப்போதும்கூட எஸ்.சி்., எஸ்.டி. சமூகத்தினரிடையே அதிகமாகவே காணப்படுகிறது. எனவே இப்போதைய தேவை இந்த படிப்பு உதவித் திட்டத்தை நிறுத்துவது அல்ல; கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்வதே ஆகும். எனவே இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment