எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் பயன்படுத்தப்படும், ‘டிஸ்பிளே’வுக்கான தேவை, இந்தியாவில், இன்னும் ஐந்து ஆண்டுகளில், 4.38 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என, ஐ.சி.இ.ஏ., எனும், இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய மின்னணு மற்றும் தகவல் தொலைதொடர்பு துறை செயலர் சாவ்னி மேலும் கூறியதாவது: டிஸ்பிளே சாதனங்களுக்கான தேவை, கடந்த ஆண்டில் மட்டும், 36 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.இது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும். வரும் 2025ம் ஆண்டில், இது, 73 ஆயிரம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசினுடைய, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எவ்வாறாக இருந்தாலும், தற்சமயம் இந்தியா உள்நாட்டில், டிஸ்பிளே தயாரிப்பில் ஈடுபடவில்லை.
அனைத்து விதமான டிஸ்பிளே சாதனங்களும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறினார்.
இத்துறையின் வருவாயில், 65 அதிகமான பங்களிப்பை, மொபைல் போன், டிவி ஆகிய சாதன பிரிவுகள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment