வேளாண் துறை செயலர், தோட்டக்கலைத் துறை இயக்குனர் பணியிடங்களுக்கு, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தின் சாகுபடி நிலவரம், உரங்கள் தேவை குறித்து, மத்திய வேளாண் துறை அதிகாரிகளிடம், அவ்வப்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த வேண்டும். களைகட்டும்உரங்கள் வினியோகம், விதைகள் வினியோகம், பிரதமரின் உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள், வேளாண் துறை இயக்குனருக்கு உள்ளன. தோட்டக்கலைத் துறையிலும், இதேபோல பல பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, இரண்டுக்கும் தனி இயக்குனர்கள் அவசியம். தற்போது, தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதால், குறுவை பருவ நெல் சாகுபடி உள்பட, பலவகை பயிர்கள் சாகுபடி களைகட்டும். இந்த நேரத்தில், விவசாயிகளின் தேவைகளை, அரசிடம் எடுத்து கூறி, உதவிகளை வழங்குவதற்கு, வேளாண் துறை செயலர், தோட்டக்கலை இயக்குனர் பதவிகளுக்கு, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment