அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 18, 2021

அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்?

ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே முதல் பதினைந்து நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டிஏ உயர்வு இப்போது ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. 
7 வது ஊதியக்குழு, அகவிலைப்படி உயர்வு பற்றிய சமீபத்திய செய்தி: கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜே.சி.எம் கவுன்சில், பணியாளர்கள் சார்பில், ஜூன் 2021 இல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான டிஏ உயர்வை அறிவிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. 


வரவிருக்கும் டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் டிஏ உயர்வு அறிவிப்பு நிலுவையில் உள்ளது. கோவிட் -19 இரண்டாவது அலையின் காரணமாக எதிர்பார்க்கப்படும் டிஏ உயர்வு சுமார் ஒரு மாதம் தாமதமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


எனவே, ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே முதல் பதினைந்து நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டிஏ உயர்வு இப்போது ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது

No comments:

Post a Comment