கரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்காக கட்டாயம் இரண்டு முகக்கவசம், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு விடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், இது கரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள்ளே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்.
இந்த தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக மிக அவசியமானது இந்த முகக்கவசம். முகக்கவசம் இன்று மனிதர்களுக்கு உயிர்கவசமாக மாறியுள்ளது. இந்த முகக்கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். அது ரொம்ப முக்கியம். இந்த முகக்கவசத்தை முழுமையாக மூக்கு, வாயை முடியிருக்கும் அளவுக்கு போட்டுங்கள்.
அதேபோன்று மருத்துவர்கள் இன்னொரு முக்கிய தகவலையும் சொல்கின்றனர்.
முகக்கவசம் அணியுங்கள்!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2021
கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள்!
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்!
நம்மையும் காத்து,
நாட்டு மக்களையும் காப்போம்! pic.twitter.com/bPcBrg1Q8E
அதாவது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மருத்துவமனைகளுக்கு, பேருந்துகளில் பயணிக்கும்போது, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் போது இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொள்வது நல்லது என்று கூறுகின்றனர்.
கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக முக்கியமானது தடுப்பூசி.
MUST READ ஜிப்மர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போடட்டுக்கொள்ளங்கள். நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் இருக்கிற மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான். தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம்.
முகக்கவசம் அணிவது, கிரிமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். "வரும்முன் காப்போம், கரோனா இல்லா தமிழகம் அமைப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment