யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, May 13, 2021

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பாதிப்புகளும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

MUST READ 
இதன் காரணமாக பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு 2021-22 ஆம் ஆண்டுக்கான தேர்வு 712 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 

MUST READ 

 அதன்படி வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment