விற்பனைக்கு புதிய முறை பால் வியாபாரி அசத்தல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 17, 2021

விற்பனைக்கு புதிய முறை பால் வியாபாரி அசத்தல்

ஆந்திராவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பால் வியாபாரி ஒருவர், பால் கொள்முதல் செய்யவும் விற்பனை செய்யவும் புதிய வழிமுறையை கையாண்டு வருகிறார். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், மதனபள்ளியில் சுதாகர் என்ற பால் வியாபாரி, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வித்தியாசமான முறையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை நடத்தி வருகிறார்.தன் வீட்டின் வாசல் முன், இரண்டு பெரிய குழாய்களை பொருத்தி, அதை மூடியிடப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களில் இணைத்துள்ளார். 

அதில் ஒன்று, கால்நடை விவசாயிகள் கறந்த பாலை ஊற்றவும், மற்றொன்று பால் தேவைப்படுவோருக்கு பால் பெற்றுக் கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ளது. பாலின் அளவை அறிய எடை பார்க்கும் கருவியும் பொருத்தி உள்ளார்.பால் வாங்க வருபவர்கள் பணத்தை கதவின் அருகில் வைத்தால், அவர்களுக்கு தேவையான பால், குழாய் வழியாக வினியோகம் செய்யப்படும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, பால் வியாபாரி மேற்கொண்டுள்ள இந்த வழிமுறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

No comments:

Post a Comment