யு - டியூப் சேனல் துவங்கி கோவை அரசுப்பள்ளி அசத்தல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 9, 2021

யு - டியூப் சேனல் துவங்கி கோவை அரசுப்பள்ளி அசத்தல்

யு - டியூப் சேனல் துவங்கி கோவை அரசுப்பள்ளி அசத்தல்

தொழில்நுட்ப வசதிகளை, கற்பித்தலில் புகுத்த தயக்கம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கும் வகையில், தற்போது பல அரசுப்பள்ளிகள், பிரத்யேக யு-டியூப் சேனல் துவங்கியுள்ளன. இது, பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, ஐ.சி.டி., எனும் ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்பத்தின் வழி கற்பித்தல் கொண்டு வரும் நோக்கில், ஆசிரியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, பல கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாடத்திட்டம் மாற்றிய பிறகு, க்யூ.ஆர்.,கோடு ஸ்கேன் செய்து, வகுப்பறையில் கல்வி சார்ந்த அனிமேஷன் வீடியோக்களை, கட்டாயம் திரையிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பாடத்திட்டத்தை எளிதில் விளக்கும் வீடியோக்கள், தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்ம் (Tamilnadu teachers platform) என்ற இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டது. சிறந்த வீடியோக்கள், அனைத்து பள்ளி மாணவர்களும் காணும் வகையில், தீக் ஷா செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.இத்தொடர் முயற்சிகளின் பலனை அறுவடை செய்யத்தான், கல்வி தொலைக்காட்சியில் திரையிடப்படும் வீடியோக்கள், அந்தந்த மாவட்டங்களில் தயாரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுகின்றன.

இதில் சில பள்ளிகள் கூடுதல் முயற்சி எடுத்து, அனைத்து தரப்பு மாணவர்களையும் கவர, யு-டியூப் சேனல் துவங்குதல், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், பள்ளிக்கென பிரத்யேக பக்கம் உருவாக்குவது உள்ளிட்ட செயல்பாடுகளில், ஈடுபட்டு வருகின்றன. இம்முயற்சிக்கு, பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் கூறுகையில், ''கடந்தாண்டு ஆக., மாதம் எங்கள் பள்ளியின் யூ-டியூப் சேனல் (GHSS OKM விதைகள்) துவங்கப்பட்டது. 

கிட்டத்தட்ட 2 ஆயிரம் வீடியோக்கள் பதிவேற்றியுள்ளோம். 90 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.இதை பார்த்து அரசு, தனியார் பள்ளிகளில் இருந்தும், யு-டியூப் சேனல் துவங்குவதற்கான ஆலோசனைகள் கேட்கின்றனர். அவர்களின் சந்தேகங்களை விளக்குகிறோம். எங்கள் பள்ளியின் தமிழாசிரியை சாந்தாமணி பார்வையற்ற மாற்றுத்திறனாளி.இவரின் வீடியோக்களை, மாநிலம் முழுக்க பல பள்ளிகளில் படிக்கும், பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் ஆர்வமாக கேட்கின்றனர். சில ஆசிரியர்களுக்கு பாடத்திட்டத்தை எளிமையாக கற்பிக்கும் நுட்பம் தெரியும்.இதை வீடியோவாக தயாரித்து, "சமூக வலைதளங்களில்" பகிரும் போது, மற்ற மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.

www.thulirkalvi.net

யு - டியூப் சேனல் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment