அரசு கல்லுாரிகளில் ஒப்பந்த அடிப்படையில், மாற்றுப்பணி வழங்கப்பட்ட பேராசிரியர்கள் சிலருக்கு முறையான கல்வித்தகுதி இல்லை என்றும், போலி பட்டச்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, முறைகேடு காரணமாக, அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உபரியாக இருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள், அரசு கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
2000 பேர் அரசு கல்லுாரி, பாலிடெக்னிக், தொழில்நுட்ப, பொறியியல் கல்லுாரிகளில் மாற்றுப்பணி என்ற பெயரில் தற்போதும் உள்ளனர். இவர்களுக்கே, அரசு கல்லுாரிகளில் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.கோவை மண்டலத்தில் மட்டும், இது போன்று கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லுாரிகளில், 60 பேர் இப்பல்கலை சார்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்.
அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'அண்ணாமலை பல்கலைஉபரி ஆட்களுக்கு,ஒப்பந்த அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கி அவர்களுக்கு, ஊக்க ஊதியம், விடுமுறை என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சிலரால் ஆன்லைன் வகுப்புகளை கூட கையாள தெரியவில்லை.மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாலிடெக்னிக், தொழில்நுட்ப, கல்வியியல்கல்லுாரிகளிலும் இந்த நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, இவர்களின் கல்வித்தகுதி, சான்றிதழின் உண்மைத்தன்மையை மறு ஆய்வு செய்து, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment