அறிவுத்திறன் வளர்க்கும் "ஆன்லைன்" சிறப்பு முகாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 18, 2021

அறிவுத்திறன் வளர்க்கும் "ஆன்லைன்" சிறப்பு முகாம்


மாணவர்கள், வினாடி - வினா போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்காக, அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலான, கோடைகால சிறப்பு முகாம், ஆன்லைனில் நடக்கவுள்ளது. 'எக்ஸ் குவிஸ் இட்' நிறுவனம் நடத்தும், இந்த சிறப்பு முகாமில் பங்கேற்பதன் மூலம், மாணவர்கள் வழக்கமான கற்றலை தாண்டி, எதையும் புரிந்து, தெளிந்து அவற்றை ஆழமாக கற்று, பதில் அளிக்கும் திறனை பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பயிற்சி முகாமில், கோல்கட்டா, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு, மிகச்சிறந்த முறையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர்.எந்த விஷயத்தையும், யார், எதற்கு, ஏன், எப்படி என்ற வகையில், தங்களுக்குள் கேள்வி எழுப்பி, கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், இந்த முகாமில் கற்றுத் தரப்படுகிறது. இந்த கோடைகால ஆன்லைன் சிறப்பு முகாம், இம்மாதம் 20 - 29ம் தேதி வரை நடக்க உள்ளது. 10 -- 18 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம்.நாள்தோறும், ஒன்றரை மணி நேரம் நடக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 98412 70711 / 9962744699 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment