மீண்டும் தேர்வு
கல்லூரிகள் வரவேற்பு
கோவை, மே 15-
'
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட உறுப்
புக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்
கான பருவத்தேர்வு மீண்டும் நடத்தப்படும்'
என, தமிழக அரசு அறிவித்திருப்பதை,
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும்
மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம்
வரவேற்றுள்ளது.
இதன் தலைவர் அஜித்குமார் லால்
மோகன், செயலர் சேதுபதி வெளியிட்டுள்ள
அறிக்கை:
கொரோனா தொற்று காரணமாக, அண்ணா
பல்கலையின் கீழ் இயங்கும் உறுப்புக்
கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்
கான பருவத்தேர்வுகள் இணைய வழியில்
நடத்தப்பட்டன.
அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ள
தாக புகார்கள் எழுந்தன.
இப்பிரச்னை, தமிழக அரசின் கவனத்துக்கு
கொண்டு செல்லப்பட்டதும், உயர்கல்வித்
துறை அமைச்சர் பொன்முடி தலைமையில்
ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், 'தேர்வு முடிவுகளில் குழப்பங்கள்
இருப்பதால், அனைத்து மாணவர்களுக்கும்
மீண்டும் தேர்வு நடத்தப்படும்; தேர்வுக்குரிய
கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது' என,
அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியது.
பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்
ததாக அறிவிக்கப்பட்ட லட்சக்கணக்கான
மாணவர்களும், குறைந்த மதிப்பெண் பெற்
றவர்களும், மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி
பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அறிவிப்பு, மாணவர்கள், பெற்
றோர், கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment