பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான, அகில இந்திய அளவில் நடத்தப்படும் கட்டட கலை திறனறி தேர்வு (நாட்டா.,) கொரோனா பரவல் காரணமாக, தள்ளிவைAக்கப்படுவதாக கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் (சி.ஓ.ஏ.,) அறிவித்துள்ளது.நாடு முழுவதும் செயல்படும், 400க்கும் மேற்பட்ட கட்டட கலை கல்லுாரிகளை, மத்திய அரசின் கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்', அமைப்பு கட்டுப்படுத்துகிறது.
தமிழகத்தில் மட்டும், 65 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.பி.ஆர்க்., எனப்படும் ஐந்தாண்டு பட்டப்படிப்பில் சேர, அகில இந்திய அளவில் நடத்தப்படும் கட்டடக்கலை திறனறித்தேர்வில் (நாட்டா., நுழைவுத்தேர்வு) பங்கேற்று, தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம்.ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும், இந்த நுழைவுத்தேர்வு முதல் கட்டமாக ஏப்., மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, ஜூன் 12ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தொடர்ந்து "இணையதளத்தை" பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், (சி.ஓ. ஏ.,) அறிவுறுத்தியுள்ளது..
No comments:
Post a Comment