பொது இடங்களில் ஆவி பிடிப்பது நுரையீரல் பாதிப்பு ஏற்படும்! சுகாதாரத் துறை அமைச்சர் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 17, 2021

பொது இடங்களில் ஆவி பிடிப்பது நுரையீரல் பாதிப்பு ஏற்படும்! சுகாதாரத் துறை அமைச்சர்

பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, பொது இடங்களில் மூலிகைகள் கலந்து ஆவி பிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



ஆனால், பொது இடங்களில் இதனை செய்தால் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, சென்னை, திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் ஆவி பிடிக்கின்றனர். பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று வர வாய்ப்புள்ளது. இதனை நாம் ஊக்குவிக்கக் கூடாது ஆவி பிடித்தல் போன்ற சுய வைத்தியங்களை மருத்துவகள் பரிந்துரையின்றி மக்கள் செய்ய வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment