பல்லாண்டு காலமாக நம்முடைய முன்னோர்கள்
கடைப்பிடித்து வரும் வீட்டு வைத்திய முறை
களில் ஆவி பிடித்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சித்த வைத்தியத்தில் 'வேது பிடித்தல்' என்று
இம்முறை சொல்லப்பட்டுள்ளது. ஆயுர்வேத முறை
யில் இதை 'ஸ்வேதனம்' என்கின்றனர். அதில்
'பஸ்ப ஸ்வேதனம்', நாடி ஸ்வேதனம், அவகஹா
ஸ்வேதனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இயற்கை
(நேச்சுரோபதி) முறையில் ‘நீராவிக் குளியல்' (ஸ்டீம்
பாத்) முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
தற்போதைய நெருக்கடியான கோவிட்-19 பெருந்
தொற்று காலத்தில் மாஸ்க், சானிடைசர் ஆகிய
வற்றை பயன்படுத்துவதுடன், ஆவி பிடிக்கும்
முறையையும் தினசரி வாழ்வில் ஒன்றாக பின்பற்றும்
வழக்கம் ஏற்பட்டு வருகிறது.
ஆவி பிடிப்பது என்ற நீராவி சிகிச்சை இருமலை
குணப்படுத்தும் மாற்று மருத்துவமாக இருக்கிறது.
குறிப்பிட்ட மூலிகைகள் அல்லது பொருட்கள் கலந்த
கொதிநீரிலிருந்து வெளியாகும் நீராவியை சுவாசம்
மூலமாக உள்ளிழுப்பதால், சைனஸ் தொந்தரவை
அகற்றி, சுவாசத்தை எளிதாக்குகிறது. அதனால், மூக்
கடைப்பு, மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல்
ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மூச்சுக்
குழாய் அழற்சி, ஆஸ்துமா, ஒவ்வாமை அல்லது
சுவாச நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு தற்காலிக
நிவாரணத்தையும் அளிக்கிறது.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க இந்த முறை
மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை
சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில்
உள்ள இறந்த செல்கள் எளிதாக அகற்றப்பட்டு,
முகப்பருக்கள் குறையும். சருமத்தின் மேற்பரப்பில்
உள்ள அழுக்கு நீங்குவதால் முகம் பளிச்சென்று
இளமையுடன் காட்சியளிக்கும்.
எளிமையான இந்த முறையை சரியாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். தவறாக செயல்படும்
நிலையில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும்
என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதாவது,
அதிக நேரம் ஆவி பிடிக்கக்கூடாது. ஒருவரால்
தாக்குப்பிடிக்க முடிந்த அளவை விடவும் சற்று
குறைவான அளவுக்கே நீராவியை சுவாசம் மூலம்
உள்ளிழுக்க வேண்டும். மேலும், ஒருவர் ஆவி பிடித்த
துணி மற்றும் தண்ணீரை இன்னொருவர் பயன்
படுத்தக்கூடாது.
அதனால், கிருமித் தொற்றுகள்
ஏற்படும் வாய்ப்பு உண்டு.
வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளை ஆவி பிடிக்க
வைக்கும்போது பெரியவர்கள் அல்லது பெற்றோர்
அருகில் இருந்து வழிகாட்டுவது அவசியம்.
பாரம்பரிய
முறையான ஆவி பிடிப்பதில்
நன்மைகள் இருக்கின்றன.
உடல்நிலைக்கு ஏற்ப எந்த மருந்துப்பொருளை
பயன்படுத்தி ஆவி பிடிக்க வேண்டும் என்பதை,
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்வது
நல்லது.
No comments:
Post a Comment