திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கருத்தரங்கம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. MOST READ NCERT REGIONAL INSTITUTE OF EDUCATION - ADMISSION NOTIFICATION-2021-22
ஆராய்ச்சி மைய அங்கீகாரம்திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6 இளநிலை பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இந்த கல்லூரிக்கு அறிவியல் ஆய்வு துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செய்முறை ஆய்வகங்கள், அனைத்து துறைக்கும் பொதுவான மைய நூலகம், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நூலகமும் உள்ளன. கல்லூரியின் அனைத்து இளநிலை துறைகளும் முதுகலை கணினி துறையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நிரந்தரமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்லூரியின் கணினி துறை, மின்னணுவியல் தொடர்பியல் துறைக்கு ஆராய்ச்சி மையத்திற்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி உள்ளது. கல்லூரியில் குளிரூட்டப்பட்ட சிவந்தி கலையரங்கம், கருத்தரங்க அறைகள் உள்ளிட்ட பல நவீன கூடங்கள் உள்ளன.
MOST READ
வேலை வாய்ப்புகள்கல்லூரியில் தரமான கல்வி வழங்குவதுடன் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், துறை சார்ந்த அறிவு, தகவல் தொடர்பு மற்றும் முடிவு எடுக்கும் ஆற்றல் போன்ற திறன்களை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கின்றது. மாணவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான மனிதவள சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
MOST READ
இணையவழி கருத்தரங்கம்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ‘தொடர வேண்டிய பாதை’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. வேன்டேஜ் நிறுவன இயக்குனர் அருண் கிளாட்வின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ-மாணவிகளின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறார். இந்த கருத்தரங்கமானது மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், வாழ்வில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறவும் வழிவகுக்கும்.
பங்கேற்க...இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு 10 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் https://forms.gle/q8gcT8aG2eVxbqCAA என்ற இணையதளத்திலும் மற்றும் மேற்கண்ட கியு.ஆர். குறியீடு மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். கருத்தரங்கில் பங்கேற்பதற்கான இணைப்பு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். மேலும் கருத்தரங்கு பற்றிய விவரங்கள் அறிய www.drsacoe.org என்ற கல்லூரியின் இணையதளத்திலும், 94434 53030 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment