கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட 136 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர்.
MUST READ ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால பி.எட். படிப்பு தற்காலிக நிறுத்தம்: தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு
பதவி ஏற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய தாய்மொழியான மலையாளத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிகுளம் எம்.எல்.ஏ.வான ராஜா, தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதேபோல் மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ. அஷரப் கன்னடத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment