‘செமிகண்டக்டர்’கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் தயாரிப்பதில் பாதிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, May 9, 2021

‘செமிகண்டக்டர்’கள் தட்டுப்பாடு கம்ப்யூட்டர் தயாரிப்பதில் பாதிப்பு

:உலகளவில், மின்னணு பொருட்கள் தயாரிப்பில் மிக முக்கிய பங்காற்றும், ‘செமிகண்டக்டர்’களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் ஆகியவை கிடைப்பது, 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு குறையக்கூடும். ‘டெக்ஆர்க்’ இருப்பினும், மொபைல் போன் தயாரிப்பில் பெரிய அளவிலான சிக்கல்கள் இப்போது ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள், சந்தை நிபுணர்கள். 


காரணம், இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, நிறுவனங்கள், போதுமான அளவுக்கு செமிகண்டக்டர்களை வாங்கி சேமித்து வைத்திருக்கின்றன. ‘டெக்ஆர்க்’ எனும் சந்தை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் நிறுவனர் பைசல் கவூசாஇது குறித்து கூறியுள்ளதாவது:

மார்ச் மாதத்துக்கு முன்பு வரை, செமிகண்டக்டர் பற்றாக்குறை என்பது ஒரு வதந்தி போலவே இருந்தது. நிறைய பிராண்டுகள் பற்றாக்குறை இருப்பதை ஏற்கவில்லை. ஆனால், மார்ச் மாதத்துக்குப் பின் பெரிய பெரிய பிராண்டு களே பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையும்; அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க துவங்கின. பாதிப்பு கடந்த ஆண்டு திடீரென அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்படவும், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துவிட்டது. அதன் பாதிப்பு தொடர்கிறது. இந்த பற்றாக்குறை மேலும் சில காலாண்டுகளுக்கு தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment