மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கடிதம் -முழு விவரம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 17, 2021

மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கடிதம் -முழு விவரம்


'பள்ளிகளில் இணைய வழி கல்வியை தொடர்வதற்கான, வழிமுறைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தை, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்த வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சருக்கு, தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கடிதம் எழுதி உள்ளார். 


மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால், இன்று மாநிலங்களின் கல்வித் துறை செயலர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, கலந்தாலோசனை நடத்த உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.அப்போது, கொரோனா நோய் தொற்று காலத்தில், கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணைய வழி கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துதல் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. 


இது தொடர்பாக, தமிழக கல்வித் துறை அமைச்சர் மகேஷ், மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம்:கலந்துரையாடல் கூட்டத்தை, தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்துவதே, ஏற்புடையதாக இருக்கும். இக்கூட்டத்தில், மாநில அரசு சார்பில், மிக முக்கியமான பொருட்களான, புதிய தேசிய கல்வி கொள்கை நடைமுறை மீதான கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க, தயாராக உள்ளோம்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment