MOST READ
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலையை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்யும்படியும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்றும் 11-ந் தேதியன்று முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பல்வேறு அரசுப் பணியாளர் சங்கங்கள் கடிதம் அளித்தன. MOST READ NCERT REGIONAL INSTITUTE OF EDUCATION - ADMISSION NOTIFICATION-2021-22
அந்த கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து அவற்றை ஏற்க முடிவு செய்துள்ளது.
MOST READ
அவர்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில், மே அல்லது ஜூன் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அந்தத் தொகை, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்பட உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment