உயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம்? ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, May 18, 2021

உயிரைக் கொல்லும் நீண்ட வேலை நேரம்? ; உலக சுகாதார மையத்தின் ஆய்வில் அதிர்ச்சி!

உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களில் 72% ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பதை காட்டுகிறது. கொரோனா தொற்றினால் மோசமான போக்கில் நீண்ட நேரம் வேலை செய்வது, ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்கிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று கவலை தெரிவித்துள்ளது. நீண்ட வேலை நேரங்களுடன் தொடர்புடைய உயிர் இழப்பு குறித்த முதல் உலகளாவிய ஆய்வு, சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் ஆய்வறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. 


2016 ஆம் ஆண்டில், நீண்ட வேலை நேரத்துடன் தொடர்புடையவர்கள் பக்கவாதம் மற்றும் இதய நோயால் சுமார் 745,000 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிக இறப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குனர் மரியா நீரா, ‘வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேட்டை உருவாக்குகிறது. 

இந்த தகவலை அடிப்படையாக வைத்து இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க உள்ளதாக’ அவர் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களில் 72% ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பதை காட்டுகிறது. 

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய உலக சுகாதார மையம் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு முடிவு காட்டுகிறது. இந்த ஆய்வானது 194 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிபுரிவோர் ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்வதால் அவர்களில் 35% பேர் பக்கவாதம் மற்றும் 35-40 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது இஸ்கிமிக் இதய நோயால் இறக்கின்றனர். இந்த ஆய்வு 2000-2016 காலகட்டத்தை உள்ளடக்கியது, எனவே COVID-19 தொற்றுநோயை அவர்கள் சேர்க்கவில்லை. 

ஆனால் உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் தொலைதூர வேலைகள் அதிகரிப்பு மற்றும் கொரோனா வைரஸ் அவசரநிலையின் விளைவாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை பணியாளர்களில் இந்த அபாயங்களை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில், அதிகமான வேலை நேரத்தை நோக்கிய போக்கை வளர்க்கக்கூடிய முன்னேற்றங்களை துரிதப்படுத்தி வருகிறது என உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இதனால், குறைந்தது 9 சதவீத மக்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் எனவும் மதிப்பிட்டுள்ளது. 

உலக சுகாதார மையத்தின் ஊழியர்கள், அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உட்பட, அனைவரும் தொற்றுநோய் காலத்தில் நீண்ட நேரம் பணியாற்றி வருவதாகவும், ஆய்வின் முடிவில் ஐநா சபையில் தனது கொள்கையை மேம்படுத்த முற்படுவதாகவும் நீரா கூறியுள்ளார். ஆய்வில் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கான காரணங்களாக, நிறுவனத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக தான் என நிரூபிக்கப்பட்டுள்ளதால், முதலாளிகளுக்கு கேப்பிங் நேரம் பயனளிக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அதிகாரி பிராங்க் பெகா கூறினார். “பொருளாதார நெருக்கடியில் நீண்ட வேலை நேரத்தை அதிகரிக்காதது உண்மையில் ஒரு சிறந்த தேர்வாகும்.

No comments:

Post a Comment