MUST READ
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கு, 130 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 10ம் தேதி துவங்கியது. விண்ணப்பிக்க, 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.முதுநிலை படிப்பு முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதுநிலை எல்.எல்.எம்., தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, பதிவாளர் பாலாஜி அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment